< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
பந்தல் மேடை அமைக்கும் பணி தீவிரம்
|2 Jun 2023 10:56 PM IST
பந்தல் மேடை அமைக்கும் பணியினை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல்களின் சிறப்பான வாதத்தால் தடை நீக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு பேரவை, ஆர்வலர்கள் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டையில் வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இடையப்பட்டி அருகே உள்ள இடத்தில் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதனை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் வருகையையொட்டி விழா நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அமைச்சர் மெய்யநாதனுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது போலீஸ் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.