< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
குடிநீர் கேட்டு சாலை மறியலுக்குமுயன்ற பெண்களால் பரபரப்பு
|27 Sept 2023 2:32 AM IST
குடிநீர் கேட்டு சாலை மறியலுக்குமுயன்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் அருகே பெருமாள் சேரி திருவண்ணாமலை ஊராட்சி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்து தரக் கோரியும், குடிநீர் வழங்க கோரியும் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.