< Back
மாநில செய்திகள்
பெண்ணை தாக்கியவர் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

பெண்ணை தாக்கியவர் கைது

தினத்தந்தி
|
17 Oct 2023 11:19 PM IST

பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் புது தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மனைவி லதா (வயது 47). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் நடராஜன்(63) என்பவருக்கும் வீட்டின் முன்பு தண்ணீர் வருவது சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் நடராஜன் மகன் தினேஷ்(37) லதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் லதா புகார் அளித்தார். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் தினேஷ் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்