< Back
மாநில செய்திகள்
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பெண் - தமிழில் பதில் கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி
மாநில செய்திகள்

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பெண் - தமிழில் பதில் கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி

தினத்தந்தி
|
5 April 2023 11:02 PM IST

காசி தமிழ் சங்கமம் சென்று வந்த பெண்மணிக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

கோவை,

காசி தமிழ் சங்கமம் சென்று வந்த பெண்மணிக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். சூலூர் முத்து கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த துளசி அம்மாள் மற்றும் ராஜாமணி ஆகியோர் காசி தமிழ் சங்கம நிகழ்வுக்கு சென்றிருந்தனர். இவர்கள், பிரதமர் மோடிக்கு காசி தமிழ் சங்கம நிகழ்வு குறித்து கடிதம் எழுதி இருந்தனர்.

இதற்கு பதில் அனுப்பும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பதில் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் இந்தியா ஒரு பன்முக தன்மை கொண்ட நாடு என்றும், ஒவ்வொருவரின் உணர்வாக இருக்கக்கூடியது என்றும் கூறியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கலாச்சாரத்தை ஒன்றிணைப்பது மத்திய அரசின் நோக்கம் என மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை பெற்ற துளசி அம்மாள் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்