< Back
மாநில செய்திகள்
கோவிலுக்கு சென்ற பெண் மாயம்
அரியலூர்
மாநில செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண் மாயம்

தினத்தந்தி
|
10 Sept 2023 1:02 AM IST

கோவிலுக்கு சென்ற பெண் மாயமானார்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி உமா(வயது 55). இவர் கடந்த 3-ந் தேதி அப்பகுதியின் அருகே உள்ள கோவில் கும்பாபிஷேகத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தியாகராஜன் அக்கம் பக்கத்திலும், உறவினர்கள் வீடுகளிலும் என பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான உமாவை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்