< Back
மாநில செய்திகள்
தவறி விழுந்த பெண் சாவு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தவறி விழுந்த பெண் சாவு

தினத்தந்தி
|
10 Oct 2023 3:29 AM IST

தஞ்சையில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்;

தஞ்சை மேலவெளி ராமநாதபுரம் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி துர்காதேவி(வயது 42). சம்பவத்தன்று துர்காதேவி தனது உறவினர் ஒருவருடன் கடைக்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சீனிவாசபுரம் கிரி ரோடு பகுதி அருகே வரும் வழியில் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளில் ஒருவர் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துர்காதேவி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்