< Back
மாநில செய்திகள்
வெற்றி கோப்பை குன்னூருக்கு வந்தது
நீலகிரி
மாநில செய்திகள்

வெற்றி கோப்பை குன்னூருக்கு வந்தது

தினத்தந்தி
|
29 July 2023 1:30 AM IST

ஆசிய ஆக்கி போட்டிக்கான வெற்றி கோப்பை குன்னூருக்கு வந்தது. இதனை அமைச்சர், கலெக்டர் வரவேற்றனர்.

குன்னூர்

ஆசிய ஆக்கி போட்டிக்கான வெற்றி கோப்பை குன்னூருக்கு வந்தது. இதனை அமைச்சர், கலெக்டர் வரவேற்றனர்.

ஆசிய ஆக்கி போட்டி

ஆக்கி இந்தியா அமைப்பு மற்றும் தமிழக விளையாட்டுதுறை சார்பில் சென்னையில் ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி, அடுத்த மாதம்(ஆகஸ்டு) 3-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா, தென்கொரியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கின்றன.

இதையடுத்து ஆக்கி போட்டிக்கான லோேகா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த லோகோவில் இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் ஆஸ்கர் விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்ெபரர்ஸ்' என்ற ஆவண படத்தில் நடித்த முதுமலையை சேர்ந்த யானை மற்றும் பாகன் பொம்மன் பெயர் இடம் பெற்று உள்ளது. லோகோவில் பாகன் பொம்மன் பெயரும், யானை ஆக்கி ஸ்டிக் பிடித்து நிற்பது போலவும் பொறிக்கப்பட்டு உள்ளது.

வெற்றி கோப்பை

இதையடுத்து ஆக்கி போட்டிக்கான வெற்றி கோப்பை மற்றும் லோகோ ஆகியவை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆக்கி போட்டிக்கான வெற்றி கோப்பை மற்றும் லோகோ ஆகியவை நேற்று முன்தினம் காலை நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு வந்தது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் வரவேற்று பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். அதில் பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி கலந்துகொண்டனர். அவர்களுக்கு லோகோ அச்சிடப்பட்ட டீ-சர்ட் வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கோப்பையையும், லோகோவையும் பார்வையிட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்