< Back
மாநில செய்திகள்
தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்
தென்காசி
மாநில செய்திகள்

தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

தினத்தந்தி
|
25 Feb 2023 6:45 PM GMT

கடையம் அருகே தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

கடையம்:

கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டெருமை, கட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறை சார்பில் மின்வேலி மற்றும் அகழிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அகழி தூர்ந்தும், சோலார் மின்வேலி பராமரிப்பு இல்லாததாலும் வனவிலங்குகள் ஊர் பகுதிக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கடையம் அருகே கருத்தபிள்ளையூரில் உள்ள கிஷோர் குமார் என்பவர் தோட்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தது. அங்கிருந்த 80 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தும், 40 தென்னை மரங்களில் குருத்துகளை தின்றும், அங்குள்ள சொட்டு நீர் பாசன குழாய், வேலியை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊர் மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சம்பவம் நடைபெற்ற தோட்டத்திலிருந்து குடியிருப்பு பகுதி சுமார் 100 மீட்டரில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு பார்வையிட வந்த கடையம் வனத்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்