< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்
|8 Feb 2023 12:49 AM IST
விக்கிரமசிங்கபுரத்தில் தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருணாசலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). விவசாயியான இவரது தோட்டத்தில் வனப்பகுதியில் இருந்து வந்த 5-க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தது. அங்கிருந்த 10 தென்னை மரங்கள், 15 பனை மரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.
இதுபற்றி கண்ணன் கூறுகையில், 'இந்த பகுதியில் அடிக்கடி யானை கூட்டம், வயல்களிலும், தோட்டங்களிலும் புகுந்து சேதத்தை உருவாக்கி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. ஆகவே இதுதொடர்பாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.