< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்
|19 Sept 2023 12:15 AM IST
கடையநல்லூர் அருகே தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் கல்லாற்றில், மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் தென்னை, வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள தர்மர் என்ற விவசாயியின் தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியது. 30-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளின் குருத்துகளை யானைகள் சேதப்படுத்தி சென்று விட்டதாக விவசாயி தெரிவித்தார். எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.