< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கரும்பு ஏற்றிச்சென்ற லாரியை வழிமறித்து அலப்பறை செய்த காட்டுயானை
|24 Jun 2022 1:34 PM IST
சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு ஏற்றிச்சென்ற லாரியை வழிமறித்த காட்டுயானை, லாரியில் இருந்த கரும்புகளை ருசித்தது.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது. தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே லாரி சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை கரும்பு ஏற்றிச்சென்ற லாரியை வழிமறித்தது.
யானையை கண்ட லாரிஓட்டுனர் உடனடியாக லாரியை நிறுத்தியார். இதையடுத்து அந்த யானை, தன் தும்பிக்கையால் லாரியில் இருந்த கரும்புகளை இழுத்து ருசித்து தின்றது. யானை லாரியை மறித்து, அதில் இருந்த கரும்புகளை தின்ற வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகியுள்ளது.