< Back
மாநில செய்திகள்
சென்னையில் உச்சத்தை எட்டிய தக்காளி விலை..! மக்கள் அதிர்ச்சி.!
மாநில செய்திகள்

சென்னையில் உச்சத்தை எட்டிய தக்காளி விலை..! மக்கள் அதிர்ச்சி.!

தினத்தந்தி
|
2 July 2023 7:39 AM IST

கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து வருவதால் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தக்காளி விலை கடந்தசில நாட்களுக்கு முன் திடீரென உயர்ந்தது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை மக்கள் வாங்கி சென்றனர். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று மேலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ. 90-க்கு விற்ற தக்காளி, தற்போது மேலும் 10 ரூபாய் உயர்ந்து தற்போது ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், சில்லரை விற்பனை நிலையங்களில் ரூ. 130 முதல் ரூ. 140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து வருவதால் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்