< Back
தமிழக செய்திகள்
வாரச்சந்தை செயல்படாது
அரியலூர்
தமிழக செய்திகள்

வாரச்சந்தை செயல்படாது

தினத்தந்தி
|
5 March 2023 12:32 AM IST

அரியலூரில் இன்று வாரச்சந்தை செயல்படாது.

அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடந்து வந்தது. தற்போது அந்த இடத்தில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜெயங்கொண்டம் சாலையில் நகராட்சி அலுவலகம் அருகே வாரச்சந்தை செயல்படாது. அதற்குரிய இடம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்