< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குடிநீர் குழாய் உடைந்து 30 அடி உயரத்திற்கு பீறிட்டு எழுந்த தண்ணீர்...!
|6 Feb 2023 6:42 PM IST
அவினாசி அருகே குடிநீர் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல் தண்ணீர் கொட்டியது.
திருப்பூர்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து அவினாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக பூமிக்குள் ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவினாசி மங்கலம் ரோட்டில் இன்று கருணை பாளையம் பிரிவு அருகே பூமிக்குள் இருந்த குடிநீர் குழாய் உடைந்து. இதனால் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு மேல்நோக்கி சென்று அருவிபோல் கொட்டியது.
இதை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள் சம்பவ இடம் வந்து குழாய் உடைப்பை சரிசெய்தனர்.