< Back
மாநில செய்திகள்
அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு

தினத்தந்தி
|
3 Oct 2023 2:36 AM IST

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

விக்கிரமசிங்கபுரம்:

மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அணையான பாபநாசம் அணை தென்மாவட்ட மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தின நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 6,206.13 கன அடியாக காணப்பட்ட நிலையில் நேற்று 6,277.81 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் 80.5 அடியில் இருந்து ஒரே நாளில் சுமார் 8 அடி உயர்ந்து, 88.9 அடியாக உயர்ந்தது. இதேபோல் உச்ச நீர்மட்டம் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 104.07 அடியாக இருந்த நிலையில் நேற்று 108.74 அடியாக உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்