< Back
மாநில செய்திகள்
கோமுகி அணையின் நீர்மட்டம் 39.50 அடியாக உயர்வு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கோமுகி அணையின் நீர்மட்டம் 39.50 அடியாக உயர்வு

தினத்தந்தி
|
4 Aug 2022 5:00 PM GMT

தொடர்மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் 39.50 அடியாக உயர்ந்தது.

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி ஆகும். அணையின் மூலம் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அணையின் நீர் மட்டம் 20 அடியாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியான கல்வராயன்மலையில் பரவலாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அணையில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் கீடு கீடுவென உயர்ந்து தற்போது 39.50 அடியாக உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் தொடர்ந்து கல்வராயன்மலையில் மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. இதனால் அணையில் நீர்வரத்து அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்னும் ஒரு சில நாட்களில் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என தெரிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்