< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 13,839 கன அடியாக குறைவு
|29 July 2023 4:58 PM IST
தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.
சேலம்,
கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால், கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது.
இந்த நிலையில், தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 18,058 கன அடியில் இருந்து 13,839 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து தற்போது பாசனத்திற்காக 12,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.