< Back
மாநில செய்திகள்
மங்களம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
திருச்சி
மாநில செய்திகள்

மங்களம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

தினத்தந்தி
|
5 May 2023 1:22 AM IST

மங்களம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

உப்பிலியபுரம்:

திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பச்சைமலையும் ஒன்றாகும். தற்போது பெய்து வரும் பலத்த மழையால் மங்களம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சோபனபுரத்தில் இருந்து டாப்செங்காட்டுப்பட்டிக்கு செல்லும் சாலையில் பள்ளங்கள், மண் அரிப்புகள் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளான நிலையில், கடந்த சில வருடங்களாக பச்சைமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது சாலை புதுப்பிக்கப்பட்டு உள்ளதால் கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் பச்சைமலையில் பெய்த மழையால் மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்