< Back
மாநில செய்திகள்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
தர்மபுரி
மாநில செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

தினத்தந்தி
|
23 May 2022 9:45 PM IST

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது.

பென்னாகரம்:

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது.

ஒகேனக்கல் அருவி

கர்நாடகம் மாநிலம் பெங்களூர், கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் தமிழகத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டு, நாட்றாபாளையம், கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது.

இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் 16 ஆயிரம் கனஅடியாக குறைந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

6-வது நாளாக தடை

இந்த நீர் வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 6-வதுநாளாக தடை நீடிக்கிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார், தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்