தேனி
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது
|தமிழக - கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்து உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு குறைந்ததால் நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 457 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. இந்நிலையில் நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 296 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 141.80 அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 250 கனஅடியாகவும் இருந்தது.
நீர்ப்பிடிப்பு மற்றும் தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- பெரியாறு 3.2, தேக்கடி 9.2, கூடலூர் 1.4, சண்முகா நதி 3.4, உத்தமபாளையம் 1.2, போடி 2.4, வைகை அணை 30.2, மஞ்சளாறு 19, சோத்துப்பாறை 9, பெரியகுளம் 19,வீரபாண்டி 6.2, அரண்மனைபுதூர்8.4, ஆண்டிப்பட்டி 13.8.