
திருவாரூர்
சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

வலங்கைமான் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.
வலங்கைமான்:
வலங்கைமான் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.
தொழிலாளி
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பூந்தோட்டம் கீழ ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தனமணி(வயது 68). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர், பூந்தோட்டம் குடியான தெருவை சேர்ந்த குருமூர்த்தி மனைவி அன்பரசி என்பவரின் கூரை வீட்டின் மேற்கூரையை பிரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
சுவர் இடிந்து விழுந்து பலி
அப்போது திடீரென்று அந்த வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து தனமணி மீது விழுந்தது. இதில் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த தனமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரித்துவாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனமணி உடலை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுதொடர்பாக அரித்துவாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.