< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
ஏரி நிரம்பியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி
|12 Dec 2022 1:00 AM IST
ஏரி நிரம்பியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு நடத்தினர்.
மாதேஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டாரஅள்ளி ஏரிக்கு பாப்பாரப்பட்டி பகுதி ஏரிகளுக்கு பஞ்சப்பள்ளி அணை உபரிநீர் வழங்கும் ஜெர்தலாவ் கிளைக் கால்வாய் மூலம் கடந்த சில நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனை ஒட்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியது. ஏரி நிரம்பிய மகிழ்ச்சியில் கிராம மக்கள் ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு நடத்தினர். முன்னாள் எம்.பி தீர்த்தராமன், மாவட்ட கவுன்சிலர் குட்டி, ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு தண்ணீரில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.