புதுக்கோட்டை
பள்ளி தலைமை ஆசிரியரை சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்...!
|கந்தர்வகோட்டை அருகே பள்ளி தலைமை ஆசிரியரை ஊர் பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பல்லவராயன்பட்டி ஊராட்சி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக புதுக்கோட்டையைச் சேர்ந்த கணேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 6 மாதத்திற்கு முன் இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பெற்றதாகவும் பொறுப்பேற்ற நாள் முதல் இவர் பள்ளிக்கு சரியாக வரவில்லை என்றும், பள்ளி நிர்வாகத்தை கவனிக்கவில்லை என்றும், ஊர் பொதுமக்கள் இவர் மீது குற்றம் சாட்டி மாவட்ட கலெக்டர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.
இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஊர் பொதுமக்கள் கூறி வந்த நிலையில் இன்று பள்ளி விடுமுறையாக இருந்த நிலையில் சம்பள பதிவேடு எடுப்பதற்காக தலைமையாசிரியர் பள்ளி வளாகத்திற்கு வந்தபோது ஊர்மக்கள் அவரை சிறைபிடித்தனர். தகவலறிந்த கந்தர்வகோட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.