< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
பஸ் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்தவர் பலி
|16 Oct 2023 1:42 AM IST
பஸ் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்தவர் பலியானார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55). இவர் நேற்று மதுரைக்கு சென்று விட்டு அரசு பஸ்சில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். ஆவியூர் பஸ் நிலையம் அருகே பஸ் வந்தபோது படிக்கட்டில் நின்று வந்த நாகராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின்பக்க சக்கரம் அவரது தலை மீது ஏறியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.