துணை ஜனாதிபதி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகை
|சிதம்பரத்தில் உள்ள பாபாஜி கோயில், ஸ்ரீ எல்லையம்மன் கோயில் போன்ற கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்யவுள்ளார்.
சென்னை,
மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி பல்கலைகழகம் செல்லும் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின் கடற்கரை சாலையில் உள்ள அரசு விடுதியில் தங்குகிறார்.
பின்னர் நாளை புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டா் மூலமாக காலை 7.30 மணிக்கு சிதம்பரம் வருகின்றாா். அங்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்வுக்கு பின்னா் காலை 8 மணியளவில் தில்லை நடராஜா் கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்கிறாா். பின்னா் சிதம்பரத்தில் உள்ள பாபாஜி கோயில், ஸ்ரீ எல்லையம்மன் கோயில் போன்ற கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்கிறாா்.இந்த ஆன்மிக நிகழ்வுகளுக்கு பின்னா் சிதம்பரத்திலிருந்து ஹெலிகாப்டா் மூலமாக நண்பகல் 12 மணியளவில் சென்னை வருகிறாா். சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு செல்கின்றார்.
அதனைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று நடராஜரை தரிசனம் செய்கிறார். இந்நிலையில், துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி, இன்று துணை ஜனாதிபதி வரும் இடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் செல்லும் சாலை, மற்றும் தங்கும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.