< Back
மாநில செய்திகள்
கலைஞர் 100 விழா நடைபெறும் இடம் மாற்றம்!
மாநில செய்திகள்

'கலைஞர் 100' விழா நடைபெறும் இடம் மாற்றம்!

தினத்தந்தி
|
25 Dec 2023 8:51 PM IST

கலைஞர் 100 நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

சென்னை,

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக திரை பிரபலங்கள் முன்னெடுக்கும் கலைஞர் 100 நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், விழா நடைபெறும் இடம் மாற்றப்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சி கோப்பை, உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதாலும், இடவசதிக்காகவும் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக கோலிவுட்டில் அடுத்த மாதம் 5 மற்றும் 6 தேதி வெளியூர் மற்றும் உள்ளூர் படப்பிடிப்புகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்