< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
தலைகுப்புற கவிழ்ந்த வேன்
|24 March 2023 12:30 AM IST
வேடசந்தூர் அருகே சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருப்பூரில் இருந்து வேடசந்தூர் நோக்கி துணி மற்றும் நூல்களை ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் நேற்று வந்து கொண்டிருந்தது. வேனை திருப்பூரை சேர்ந்த பழனிசாமி (வயது 50) என்பவர் ஓட்டினார். அந்த வேன் நேற்று அதிகாலை சாலையூர் நால்ரோடு அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாைலயோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமின்றி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.