< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
இருசக்கர வாகனம் எரிந்து நாசம்
|12 July 2023 2:20 AM IST
இரு சக்கர வாகனம் தீயில் எரிந்து நாசமானது.
விருதுநகர் அருகே உள்ள ஓ.டி.எஸ். பாலன் நகரில் வசிப்பவர் அன்புராஜ் (வயது 64). பணி ஓய்வு பெற்ற சார்பதிவாளரான இவர் தனது மனைவி இறந்து விட்டநிலையில் மகன் இமானுவேலுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் தனது பயன்பாட்டிற்காக புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கினார். அதனை தனது மகன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சம்பவத்தன்று ராமேசுவரத்தில் தனது உறவினர் இறந்து விட்டதால் அங்கு சென்று விட்ட நிலையில் அவரது மகன் இமானுவேல் இவரை தொடர்பு கொண்டு வீட்டின் முன் நிறுத்தி இருந்த புதிய இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து முழுமையாக சேதமடைந்து விட்டதாகவும், வீட்டின் முன்புறமுள்ள மின் விளக்குகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து அன்புராஜ் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.