< Back
மாநில செய்திகள்
சாலையில் லாரி கவிழ்ந்தது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

சாலையில் லாரி கவிழ்ந்தது

தினத்தந்தி
|
22 Oct 2023 1:45 AM IST

ஆனைமலையில் சாலையில் லாரி கவிழ்ந்தது.

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 55). லாரி டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் இருசப்பன்(43). கிளீனர். இவர்கள் சங்ககிரி பகுதியில் இருந்து ஆனைமலை சுந்தரபுரிக்கு பஞ்சு கட்டிகளை சரக்கு லாரியில் ஏற்றி வந்தனர். சுந்தரபுரி பகுதிக்கு வந்ததும், சாலையோரம் லாரியை டிரைவர் நிறுத்தினார். அப்போது பள்ளத்தில் ஒரு சக்கரம் இறங்கியவாறு நின்றது. உடனே லாரியை திருப்ப டிரைவர் முயன்றார். அப்ேபாது திடீரென சாலையில் லாரி கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த பஞ்சு கட்டிகள் சாலையில் விழுந்தன.

மேலும் கோவிந்தராஜ், இருசப்பன் ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். இதை அறிந்து வந்த ஆனைமலை போலீசார், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்