< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
அரசு பஸ் மீது மோதி லாரி கவிழ்ந்தது
|9 July 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகே அரசு பஸ் மீது மோதி லாரி கவிழ்ந்தது டிரைவர்கள் படுகாயம்
திருக்கோவிலூர்
சிதம்பரத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று புறப்பட்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருக்கோவிலூர்-திருவண்ணாமலை சாலை சடை கட்டி சாய்பாபா கோவில் அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிரே பெங்களூருவில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்த லாரி அரசு பஸ் மீது மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அரசு பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அரசு பஸ் டிரைவர் துரைரங்கன், லாரி டிரைவர் ஆனந்தன் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சோ்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.