< Back
மாநில செய்திகள்
லாரி மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

லாரி மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது

தினத்தந்தி
|
30 Jan 2023 12:15 AM IST

திருக்கோவிலூரில் லாரி மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது வாலிபர் படுகாயம்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள சாங்கியம் கிராமத்தை சோ்ந்தவர் தண்டபாணி மகன் கிருஷ்ணமூர்த்தி(வயது 28). இவர் சம்பவத்தன்று இரவு மேட்டுக்குப்பத்தில் உள்ள திருமண விழாவில் கலந்துகொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார். திருக்கோவிலூர் மேம்பாலத்தில் வந்தபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக கிருஷ்ணமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் தீயணைப்புநிலைய வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்