கள்ளக்குறிச்சி
பொங்கல் பாிசு தொகுப்பு வாங்க சென்ற பழங்குடியினர் தடுத்து நிறுத்தம்
|பவுஞ்சிப்பட்டில் பொங்கல் பாிசு தொகுப்பு வாங்க சென்ற பழங்குடியினரை தடுத்து நிறுத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு,
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டபவுஞ்சிப்பட்டு கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று அதே பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க சென்றனர். அப்போது அவர்களிடம், அங்கு நின்ற ஒருவர் உங்களுக்கெல்லாம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடியாது என்று கூறி அவர்களை தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரேஷன் கடைமுன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரன், ஊராட்சி மன்ற தலைவர் பகா௹ன்னிக்ஷாஷாசிம் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி நாங்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க சென்றபோது, தனிநபர் ஒருவர் எங்களை தடுக்கிறார் என்றனர். இதையடுத்து அந்த தனி நபரை போலீசார் தேடினர். ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதையடுத்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.