< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
குடிசை வீட்டின் மீது மரம் விழுந்தது
|27 Jun 2023 12:15 AM IST
தட்டார்மடம் அருகே குடிசை வீட்டின் மீது மரம் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வியாபாரி, மனைவி உயிர் தப்பினர்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள இடைசிவிளை மோடி நகரில் வசித்து வருபவர் குமார். பாத்திர வியாபாரி. இவருக்கு ஷாலினி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். நேற்று மதியம் தட்டார்மடம் பகுதியில் சூறைக்காற்று வீசியது. இந்த நிலையில் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு குமாரும், அவரது மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சூறைக்காற்றுக்கு அருகிலுள்ள பனைமரம் வேரோடு சாய்ந்து அவரது குடிசை வீட்டின் மீது விழுந்தது. சுதாரித்து கொண்ட இருவரும் வீட்டிலிருந்து வெளியே ஓடி தப்பினர். ஆனால் வீடு பலத்த சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா பாதிக்கப்பட்ட குமார் வீட்டை பார்வையிட்டார்.