< Back
மாநில செய்திகள்
மின்மாற்றி தீப்பிடித்து எரிந்தது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மின்மாற்றி தீப்பிடித்து எரிந்தது

தினத்தந்தி
|
1 Aug 2023 12:15 AM IST

சின்னசேலம் அருகே மின்மாற்றி தீப்பிடித்து எரிந்தது

சின்னசேலம்

சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் கிராம எல்லையில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மின்மாற்றி திடீரென தீப்பிடித்து எாிந்தது. இதனால் நெருப்பு ஜூவாலையுடன் கரும்புகை உருவானது. இதைப்பார்த்த அப்பகுதி விவசாயிகள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சின்னசேலம் தீயணைப்பு நிலைய அதிகாரி பரமசிவம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ரசாயன நுரை கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். உயர் மின் அழுத்தம் காரணமாக மின்மாற்றி தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்