< Back
மாநில செய்திகள்
கடலில் சிக்கியவர்களை மீட்பது குறித்து சென்னை கடற்கரை பகுதியில் 2-வது நாளாக நடந்த ஒத்திகை
சென்னை
மாநில செய்திகள்

கடலில் சிக்கியவர்களை மீட்பது குறித்து சென்னை கடற்கரை பகுதியில் 2-வது நாளாக நடந்த ஒத்திகை

தினத்தந்தி
|
24 Aug 2022 10:56 PM IST

கடலில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்பது குறித்தான ஒத்திகை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் கடலோர காவல்படை சார்பில் நடந்தது.

தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு தினத்தையொட்டி கடலில் சிக்கி தவிப்பர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி சென்னை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் இன்று மாலை 2-வது நாளாக நடைபெற்றது.

கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள்? என்பதை கடலோர காவல்படையினர் ஒத்திகை மூலம் கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் செய்து காண்பித்தனர்.

கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடல் மட்டத்தில் இருந்து 20 மீட்டர் உயரத்தில் பறந்தது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்த கடலோர காவல்படை வீரர் ஒரு கூண்டு மூலம் கடல்பகுதிக்குள் மெதுவாக இறக்கப்பட்டார்.

அவர், கடலில் சிக்கி தவிப்பர்களை மீட்டு அந்த கூண்டில் ஏற்றி மீட்பது போன்று ஒத்திகை நடந்தது. இதனை கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்தனர்.

மேலும் செய்திகள்