< Back
மாநில செய்திகள்
மின் கம்பியில் வைக்கோல் உரசி டிராக்டர் தீயில் எரிந்து நாசம்
கரூர்
மாநில செய்திகள்

மின் கம்பியில் வைக்கோல் உரசி டிராக்டர் தீயில் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
12 Feb 2023 12:00 AM IST

மின் கம்பியில் வைக்கோல் உரசி டிராக்டர் தீயில் எரிந்து நாசம் ஆனது.

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள குப்பனம்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் குளித்தலை ஈச்சம்பட்டி அருகே விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் பயிரிட்டு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அறுவடை முடிந்த பின்னர் வைகோலை தனது ஊருக்கு எடுத்து செல்வதற்காக அதே ஊரில் இருந்து டிராக்டரை வாடகைக்கு எடுத்துள்ளார். பின்னர் நேற்று டிராக்டரில் குப்பனம்பட்டியை சேர்ந்த கேசவன் வைக்கோலை ஏற்றிக்கொண்டு குப்பனம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஈச்சம்பட்டியில் இருந்து அய்யர்மலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வைக்கோல் மேலலே சென்ற மின் கம்பி மீது உரசி தீப்பிடித்துள்ளது. டிராக்டர் சிறிது தூரம் சென்ற பின்னரே வைக்கோலில் தீ பிடித்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து டிரைவரிடம் சொல்லி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் டிராக்டர் தீயில் எரிந்து நாசமானது.

மேலும் செய்திகள்