< Back
மாநில செய்திகள்
ரோட்டோரத்தில் கழிப்பறை கழிவை கொட்டிய   மினி லாரி சிறைபிடிப்பு
ஈரோடு
மாநில செய்திகள்

ரோட்டோரத்தில் கழிப்பறை கழிவை கொட்டிய மினி லாரி சிறைபிடிப்பு

தினத்தந்தி
|
17 Nov 2022 5:43 AM IST

ரோட்டோரத்தில் கழிப்பறை கழிவை கொட்டிய மினி லாரி சிறைபிடிக்கப்பட்டது.

சென்னிமலை

சென்னிமலை அருகே ஈங்கூர் பகுதியில் குளத்தோட்டம் என்ற இடத்தில் ரோட்டோரத்தில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிப்பறை கழிவுகளை மினி லாரியில் கெண்டு வந்து கொட்டுவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

உடனே மினி லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட மினி லாரியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் மினி லாரியை ஓட்டி வந்த ஓமலூரை சேர்ந்த டிரைவர் சேதுபதி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்