< Back
மாநில செய்திகள்
அதிமுகவில் அனைவரும் இணைவதற்கான நேரம் நெருங்கிவிட்டது... சசிகலா பேட்டி
மாநில செய்திகள்

அதிமுகவில் அனைவரும் இணைவதற்கான நேரம் நெருங்கிவிட்டது... சசிகலா பேட்டி

தினத்தந்தி
|
3 Feb 2023 1:32 PM IST

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைவதற்கான நேரம் நெருங்கிவிட்டது என சசிகலா பேட்டியளித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

அதிமுக இரு அணிகளாக பிரிந்து இருப்பது கட்சிக்கு நல்லது கிடையாது. இதனை ஆரம்பம் முதலே நான் வலியுறுத்தி வருகிறேன். அதிமுகவை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பக்கத்தில் நெருங்கிவிட்டோம்.

அதிமுகவில் அனைவரும் இணைவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக ஒன்றிணைவது அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்