< Back
மாநில செய்திகள்
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி
மாநில செய்திகள்

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
27 Jun 2022 2:45 AM IST

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி பொன்மலை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்மலை ஜீ-கார்னர் வேகத்தடை அருகே கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி நடந்து சென்ற நபரிடம் செல்போனை பறித்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, ஆந்தை என்ற வினோத்குமாரை (வயது 22) போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் வினோத்குமார் மாநகரில் ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருடிய வழக்கு மற்றும் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்குகள் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 7 வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதேபோல் கடந்த மே மாதம் 14-ந் தேதி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட தென்னூர் பகுதியில் வசித்து வரும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்ததாக சிறுவனின் தாய் கொடுத்த புகாரின்பேரில் பிரபு (38) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து வினோத்குமார், பிரபு ஆகியோரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 2 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்