< Back
மாநில செய்திகள்
ஜெயலலிதா மறைவுக்கு அப்போதைய அமைச்சர்களே காரணம் - ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

"ஜெயலலிதா மறைவுக்கு அப்போதைய அமைச்சர்களே காரணம்" - ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
22 Oct 2022 3:45 PM IST

ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்க தவறிய அப்போதைய அமைச்சர்கள் பகிரங்க குற்றவாளிகள் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.

சென்னை,

ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்க தவறிய அப்போதைய அமைச்சர்கள் பகிரங்க குற்றவாளிகள் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, அன்று பாரத பிரதமரை சந்தித்து தனி விமானத்தை ஏற்பாடு செய்து வெளிநாடு அழைத்துச்சென்று ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்திருந்தால், அவர் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை உயிருடன் இருந்திருப்பார்.

இதையெல்லாம் செய்யாத அன்றைய அமைச்சர்கள் அனைவரும் குற்றவாளிகள் தான். ஒருவர் கூட ஜெயலலிதாவை காக்கும் எண்ணத்தில் செயல்படவில்லை. அப்பல்லோ மருத்துவமனை உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க தவறியது ஏன்?" திட்டமிட்டே ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டதா? இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்