< Back
மாநில செய்திகள்
பேராசிரியரின் மோட்டார்சைக்கிள் திருட்டு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பேராசிரியரின் மோட்டார்சைக்கிள் திருட்டு

தினத்தந்தி
|
27 July 2023 1:53 AM IST

பேராசிரியரின் மோட்டார்சைக்கிள் திருட்டு போனது.

தஞ்சை ஜெயலட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது 43). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை மர்மநபர் யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்து ஜெயராஜ் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்