< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் திருட்டு
|5 July 2023 2:20 AM IST
நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் திருட்டு
நாகர்கோவில்,
நாகர்கோவில் இடலாக்குடியை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் நேற்று கடுக்கரையில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.40 ஆயிரம் எடுத்து கைப்பையில் வைத்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டார். இதற்காக சாமிதோப்பு பஸ்சில் ஏறி பயணம் செய்தார். பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கைப்பையில் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை காணவில்லை.
பஸ்சில் வந்தபோது பெண்ணை நோட்டமிட்டு வந்த யாரோ மர்ம ஆசாமிகள் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனே இதுபற்றி கோட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.