< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே காருக்குள் வைத்திருந்த ரூ.1¼ லட்சம் திருட்டு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் அருகே காருக்குள் வைத்திருந்த ரூ.1¼ லட்சம் திருட்டு

தினத்தந்தி
|
27 May 2023 2:02 PM IST

திருவள்ளூர் அருகே காருக்குள் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் திருடப்பட்டது.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 53) இவர் செங்கல்பட்டு போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் தனது மகளின் பிரசவ செலவுக்காக திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள ஒரு வங்கியில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து கொண்டு காக்களூர் அருகே பைபாஸ் சாலையில் உள்ள மற்றொரு வங்கி எதிரே காரை நிறுத்தி விட்டு காருக்குள் முன் இருக்கையில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை வைத்துவிட்டு வங்கிக்குள் சென்றார்.

ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தார். அப்போது கார் முன் இருக்கையின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். காரின் கதவை திறந்து பார்த்தபோது காருக்குள் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மணிகண்டன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்