< Back
மாநில செய்திகள்
திண்டிவனம் அருகே   விவசாயி வீட்டில் நகை திருட்டு;   மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம்
மாநில செய்திகள்

திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
4 Oct 2023 12:15 AM IST

திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே கீழ்மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 56), விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு அச்சிறுப்பாக்கத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அவருடைய வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5¼ பவுன் நகைகளை காணவில்லை. கோபாலகிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்