< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
செல்போன் டவரில் பொருட்கள் திருட்டு
|15 Aug 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே செல்போன் டவரில் பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார்வலைவீசி தேடி வருகிறார்கள்.
செஞ்சி
விழுப்புரம் அருகே உள்ள கக்கனூர் கிராமத்தில் உள்ள நிலத்தில் தனியார் செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான டவர் உள்ளது. சம்பவத்தன்று இந்த செல்போன் டவரில் இருந்த பேட்டரி உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து செல்போன் டவா் மேற்பார்வையாளர் தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் டவரில் உள்ள பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.