< Back
மாநில செய்திகள்
கடையின் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிள் திருட்டு
தேனி
மாநில செய்திகள்

கடையின் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிள் திருட்டு

தினத்தந்தி
|
27 Sept 2023 2:30 AM IST

ஆண்டிப்பட்டி அருகே கடையின் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிள் திருடுபோனது.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 47). இவர் தனது வீட்டின் தரைத்தளத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு முத்துகிருஷ்ணன் வழக்கம்போல் கடைக்குள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, கடையின் கதவை பூட்டினார். பின்னர் வீட்டிற்கு தூங்க சென்றுவிட்டார்.

பின்னர் நேற்று காலை முத்துகிருஷ்ணன் கடைக்கு வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் முத்துகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்