< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
விவசாயியின் மோட்டார் சைக்கிள் திருட்டு
|10 Oct 2023 2:31 AM IST
திருக்குறுங்குடியில் விவசாயியின் மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
ஏர்வாடி:
மாவடியை சேர்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணன் (வயது 48). விவசாயி. சம்பவத்தன்று இவர் திருக்குறுங்குடியில் உள்ள பெரியகுளத்தின் நடுமடை அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, வயலுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.