< Back
மாநில செய்திகள்
அம்மன் கழுத்தில் கிடந்த தாலி திருட்டு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அம்மன் கழுத்தில் கிடந்த தாலி திருட்டு

தினத்தந்தி
|
16 Oct 2023 12:15 AM IST

உளுந்தூர்பேட்டை அருகே அம்மன் கழுத்தில் கிடந்த தாலியை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாடு கிராமத்தில் பூரணி, பொற்கலை சமேத அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பூரணி மற்றும் பொற்கலை அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் தாலியை திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.90 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் இதுபற்றி கிராமமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்