< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
வாடகைக்கு குடியிருந்தவர் வீட்டில் இருந்த பொருட்களை வெளியே வீசினார்
|2 May 2023 1:15 AM IST
வாடகைக்கு குடியிருந்தவர் வீட்டில் இருந்த பொருட்களை வெளியே வீசியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர் ஆத்துபாலம் பகுதியில் காமாட்சியம்மன் ேகாவில் தெருவில் முனியராஜன் என்பவர் வீட்டில் ரதிதேவி (வயது 26) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். வீட்டை காலி செய்வதில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் சம்பவத்தன்று ரதிதேவி வெளியே சென்றிருந்தார். அப்போது முனியராஜன், ரதிதேவி குடியிருந்த வீட்டில் நுழைந்து ரூ.10 ஆயிரம், வெள்ளி பொருட்களை எடுத்துச் சென்றதுடன் வீட்டில் இருந்த பொருட்களையும் வெளியே வீசிவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. வீடு திரும்பிய ரதிதேவி வீட்டில் இருந்த பொருட்கள் வெளியே கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் முனியராஜன் மீது இந்நகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.