விழுப்புரம்
கிளியனூர் அருகேகோவில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|கிளியனூர் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிளியனூர்,
பெருமாள் கோவில்
விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த தென்சிறுவலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அழகிய மணவாள பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை கோவிலை திறந்து பூஜை செய்வதற்காக அதன் பூசாரியான அதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
நகை- பணம் கொள்ளை
உடனே கோவிலுக்குள் சென்று பார்த்தபோது மூலவர் அறையின் மரக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு அங்குள்ள மூலவர் சிலையில் இருந்த 2 பவுன் நகைகளும் மற்றும் அங்கிருந்த ரூ.2 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.